கென்யாவில் பெட்ரோல் தாங்கி வெடித்ததில் 13 பேர் பலி

கென்யாவில் எரிபொருள் தாங்கி ஊர்தியொன்று வெடித்து தீப்பற்றியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யாவின் மேற்கு பகுதியில், கிசுமு- புசியி நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி கவிழ்ந்து, அதிலிருந்த பெட்ரோல் வெளியேறியுள்ளது.

இதனைப் அவதானித்த அப்பகுதி வாழ் மக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக அங்கு திரண்டுள்ளனர்.

இதன்போது பெட்ரோல் தாங்கி ஊர்தி திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir