துறைமுக நகருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உட்பட ஐவர் கைது

கொழும்பு துறைமுக நகருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் ஒருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அதிவேக நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த சீன நாட்டவர் ஒருவர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த நால்வரை கொழும்பு துறைமுக நகருக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டு உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துரைமுருகன் நகருக்குள் நுழைவதற்கான நடைமுறைகளை மீறியமை தொடர்பில் குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த ஐந்து சந்தேக நபர்களும் இன்று கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir