மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

இன்று (20) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்த்தொட்ட காவல்துறைப் பிரிவில் உள்ள யட்டிவாவல கிராம சேவகர் பிரிவின் சாகரதெனிய வத்தையும், களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு காவல்துறைப் பிரிவின் குடா வஸ்கடுவ மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir