ஹெரோயினுடன் இருவர் கைது!

ஜா எல – கொட்டுகொட பிரதேசத்தில் வைத்து சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோ 225 கிராம் ஹேரோயினும், 868,090 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

29 வயதான ஆண் ஒருவரும், 26 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமானது என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir