தப்பியோடிய 4 கைதிகளும் கைது

தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 கைதிகள், நீதிமன்றில் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டு மீளச் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் பின்னர் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு பேரும் ரம்பொடகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது, அதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களில் இருவர் உடனேயே பிடிபட்டனர்.

ஏனைய இருவரும் காவல்துறையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir