10 நிமிடங்களில் விண்வெளி சென்று திரும்பினர் ஜெஃப் பெசோஸ் குழுவினர்

அமேசான் மற்றும் ப்ளூ ஒரிஜின் நிறுவன தலைவரும், உலகின் முதல் நிலை செல்வந்தருமான ஜெஃப் பெசோஸ் உட்பட ப்ளூ ஒரிஜின் குழுவைச் சேர்ந்த 4 பேர் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளனர்.

உலக அளவில் நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு அமேசான் நிறுவுனர் ஜெப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க், 82 வயதான முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது இளைஞர் ஆகியோர் இவ்வாறு விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஒர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் விண்கலம் மூலம் புறப்பட்ட அமேசான் நிறுவுனர் ஜெப் பெசோஸ் உள்ளிட்ட 4 பேர் 10 நிமிடங்கள் 10 செக்கன்களில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக திரும்பி உள்ளனர்.

கடந்த வாரம் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் தனது முதல் விண்வெளி பயணத்தை அமேசான் நிறுவுனர் ஜெப் பெசோஸ் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு சுமார் 177 பில்லியன் டொலர்களாகும்.

You May Also Like

About the Author: kalaikkathir