தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர் செய்த செயல்- வெளியான காணொளி!

கொழும்பு, நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை அழைத்து, அவர்களை மண்டியிட கட்டாயப்படுத்தி, அதே வகுப்பை சேர்ந்த மாணவிகளை வைத்து தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வந்த நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த ஆசிரியர் தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதுடன் சிறிது காலமாக மிக மோசமாக நடந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்களுடன் தனக்கு தொடர்புகள் இருப்பதாக கூறும் புகைப்படங்களையும் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புவதன் மூலம் தனது பயிற்சி வகுப்புகளில் நேரத்தை வீணடிப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆசிரியரின் இத்தகைய செயலை கண்டித்து சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், ஆசிரியர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த ஆசிரியர் செய்த வன்முறைக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply