இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு!

இலங்கை செஞ்சிலுவை சங்கம் முல்லைத்தீவு கிளையால் ரூ1,2 மில்லியன் பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவம் சாரா உபகரணங்கள் (22.07.21) அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திரு.எம்,உமாசங்கர் அவர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது,

ஒட்சிசன் செறிவூட்டிகள், பாதுகாப்பு முககவசங்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் உட்பட பல உபகரணங்கள் கொவிட்19 தடுப்பு நடவடிக்கை செயற்பாட்டிற்காக வழங்கி வைக்கப்ட்டது.

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவை பணிமனையில் நடைபெற்ற பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு கிளை தொண்டர்கள், செயலாளர் திரு.செ.சிவராஐா, நிறைவற்று அதிகாரி திரு.க.நிதர்சன், மருத்துவர் திரு.சத்தியரூபன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எல்.கேகிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட கொரோனா சிகிச்சை நிலையங்களுக்காகவும் மருத்துவமனைகளின் சுகாதார செயற்பாட்டிற்காகவும் பிரிவினருக்கு கொடையாளர்கள் நிறுவனங்கள்,அமைப்புக்களிடம் இருந்து தொடர்ச்சியாக சுகாதார பொருட்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir