முல்லைத்தீவிலிருந்து சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடமையில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 150 பேர் வரையில் இடமாற்றம் பெற்று அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம்,மற்றும் பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலகாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர்களே இவ்வாறு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா, போன்ற மாவட்டங்களில் இருந்து போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு வகையில் பாடுபட்டுள்ள இவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 22.07.21 திகதி வரையில் 150 ற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களின் வெற்றிடத்திற்கு புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன

You May Also Like

About the Author: kalaikkathir