மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

மாத்தளை மாவட்டத்தின் இரு பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த கிராமம் மற்றும் ஹரஸ்கம கிராமம் ஆகிய பிரதேசங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir