தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 121 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 121 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 51,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பயணத்தடைகளை மீறி மாகாண எல்லையை தாண்டி, 235 வாகனங்களில் பயணித்த 584 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir