இரண்டு தடுப்பூசிகளை ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

கண்டி – உடபேராதனை பகுதியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(24) மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த விசாரணை அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை ஆராயப்பட்டதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மத்திய மாகாணத்தின் சகல தடுப்பூசி மத்திய நிலையங்களினதும் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir