நுரைச்சோலையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் :தந்தை – அத்தை உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்

நுரைச்சோலைப் பகுதியில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் தந்தையும், அத்தை முறையான பெண்ணொருவருமே இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறைக்கு கிடைப்பெற்ற தகலவலையடுத்து அண்மையில் நுரைச்சோலைப்பகுதியில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்தே சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த தண்டனைப்பிரிவின் 308 (பி) கீழ் குற்றமாகும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையிலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir