பத்து இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் புதுக்குடியிருப்பு காவற்துறையினரால் கைது

இன்று அதிகாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் இருந்து கடத்தப்படவிருந்த சுமார் பத்து இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவரை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன் 5 பேர் தப்பி ஒடியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

சுமார் பத்து இலட்சம் பெறுதியான முதிரை மரக்குற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஓடிய ஏனையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவுக்குட்பட்ட றெட்பானா பகுதியில் இருந்து மயக்கத்தில் முயற்சிகள் இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு காவற்துறை பொறுப்பதிகாரி அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு காவற்துறையினர் மரங்களை மீட்டதோடு ஒருவரை கைது செய்தனர்

குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir