இலங்கையை வென்றது இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் சானக்க, முதலில் துடுப்பெடுத்தாட இந்தியாவுக்கு அழைப்புவிடுத்தார்.

அதற்கமைய, முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்துள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir