வடக்கின் புதிய பிரதம செயலாளர் இன்று பதவியேற்பு

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் இன்று தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது

வவுனியா மாவட்டத்தின் மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த 20ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டார்.

இவர் இன்று முற்பகல் 11.40 மணியளவில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்கவுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir