யாழ்.கோப்பாய் செல்வபுரத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்

இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை, மதுபானம் மற்றும் சமூக வன்முறைகளிலிருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வாதார தொழில் வாய்ப்பை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு நேற்று கோப்பாய் செல்வபுரத்தில் இடம்பெற்றது.

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் அனுசரணையுடன் உரும்பிராய் செல்வபுரத்தில் அமைந்திருக்கும் ஆலய குருவானவர் சொலமன் டிக்சனின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு செயற்திட்டம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிறிஸ்தவ இந்து மதகுருமார்கள், கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாசினி மருத்துவர்கள் ரி.ஹஸ்ரோன், மார்க் டயானா, உதவிப் காவல்துறை அத்தியட்சகர் சந்தன கமகே, கிராம அலுவலகர், சிறுவர் பெண்கள் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமூக பிரதிநிதிகள், தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir