மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டில் சில பகுதிகள் இன்று (27) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெக்குலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புர பகுதி

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பொத்துவில் 13 கிராம சேவகர் பிரிவு

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தும்போவில தெற்கு கிராம சேவகர் பிரிவின் கரதியான தோட்டம் என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir