தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விசாரணை

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் ஆராயுமாறு நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க தில்ஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir