18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்

18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில், சுகாதாரத்துறையின் விசேட நிபுணர்களுடன் இணைந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir