ஹிஷாலினியின் மரணம்; மாத்தளையில் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக மாத்தளை மாவட்டத்தின் கந்தேனுவர பிரதேசத்திலும் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் தம்பலகல, சின்ன செல்வகந்த, பெரிய செல்வகந்த, பிட்டகந்த, கந்தேனுவர மற்றும் உனுகலை கிராமங்கசை் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டிந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir