உலகின் பாரிய மாணிக்ககல்லை ஏலத்தில் விற்பனை செய்ய திட்டம்!

இரத்தினபுரியில் கண்டு பிடிக்கப்பட்ட உலகின் பாரிய மாணிக்கல் இந்த வருட நடுப்பகுதியில் ஏலத்தில் விற்பனை செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாணிக்ககல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை வட்டார தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.

அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

நட்சத்திர வர்க்கத்தை கொண்ட இந்த மாணிக்க கல்லானது 510 கிலோகிராம் எடையை கொண்டுள்ளது.

இந்த மாணிக்ககல்லின் சர்வதேச சந்தைப் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir