வடக்கில் நேற்று 40,391 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

வடக்கு மாகாணத்தில்  40 ஆயிரத்து 391 பேருக்கு நேற்று சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நேற்று  வடக்கு மாகாணத்தில் சினோபார்ம் முதலாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றன. இந்தத் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 39 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 110 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 ஆயிரத்து 865 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 9 ஆயிரத்து 377 பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 40 ஆயிரத்து 391 பேருக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன” – என்றுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir