யாழ். காங்கேசன்துறையில் 9 காவல்துறையினருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் அலுவலகத்தில் 9 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, தொற்றுக்குள்ளான அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir