யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரியில் மாணவர்கள் 25 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இலங்கையின் பல மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்கள் பயிற்சி பெறும்  நிலையிலேயே 25 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அனைவரும் ஏற்கனவே இரண்டு கட்டத் தடுப்பூசிகளையும் ஏற்றிய பின்பும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

You May Also Like

About the Author: kalaikkathir