பொது சுகாதார பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த பொது சுகாதார பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியபோது, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

சுகாதார சேவையில் பணியாற்றும் அதிகாரிகளை துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir