ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் உயிரிழப்பு!

ரிஷாட்டின்  வீட்டில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ரிஷாட்டின்  வீட்டில் பணியாற்றிவந்த நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹிஷாலினிக்கு முன்பாக 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் டயகமை பகுதியைச் சேர்ந்த 11 பெண்கள் ரிஷாட்டின்  வீட்டுக்குப் பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஹிஷாலினி. மற்றுமொருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பெண் ரிஷாட் வீட்டிலிருந்து வெளியேறிய பின் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களைத் தவிர மீதமுள்ள 8 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று இருவரிடம் இறுதி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir