அதிகாரிகள் சிலர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து தொற்றுநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் வலுசக்தி அமைச்சு அலுவலகம் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று முதல் தானும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தான் முதலில் அன்டிஜன் பரிசோதனை செய்துகொண்ட போதிலும் தனக்கு தொற்று உறுதியாகவில்லை என பெறுபேறு கிடைத்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், தான் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
