சேதன பசளை விவசாய வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் உதவி!

நாட்டில் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் சேதன பசளை விவசாய வேலைத்திட்டத்திற்கு, ஜப்பானின் சேதன பசளை உற்பத்தி தொழிற்சாலை நிறுவனம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜப்பானில் உள்ள குறித்த தொழிற்சாலையின் சேதன உற்பத்தி தொடர்பில் கண்காணிப்பு ஒன்றில் ஈடுபட்டதன் பின்னர் இருதரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சேதன பசளை உற்பத்தி தொடர்பான தெளிவுப்படுத்தல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை குறித்த ஜப்பானிய தொழிற்சாலை உற்பத்தி நிறுவனம் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir