நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நடைபெறும் திகதி அறிவிப்பு

சுகாதார விதிமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில், ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு, பொதுமக்கள் வழங்கப்படும் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

அது தொடர்பில், எதிர்வரும் நாட்களில் இருந்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir