முன்னிலை சோஷலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உட்பட இருவர் கைது!

முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நாடாளுமன்றுக்கு நுழைவாயில் பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, வன்முறையில் ஈடுபட்டமை மற்றும் மஹரகம காவல்நிலைய பொறுப்பு அதிகாரியை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir