ஆசிரியர்கள் போராட்டம்: கைதான 44 பேருக்கும் தொற்று இல்லை

ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய 44 பேர் நேற்று (04) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனையின்போது அவர்களுக்கு கொவிட் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், அவர்கள் இன்று (05) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir