10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம்!

10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் கடந்த 7 மாதங்களில் புதிய எரிவாயு கொள்கலன்கள் எவையும் நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir