கல்கமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இருந்து 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (07) காலை கல்கமுவ காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 வயதான தாயும், 10 வயதான மகனும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கொலை செய்த சந்தேக நபர் ஆகியோரின் சடலங்களும் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
