தங்கம் விலை கிடுகிடு சரிவு

தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி ஒரு கிராம் 4,531க்கும், சவரன் 36,248க்கும் விற்கப்பட்டது. 5ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது.

அதாவது, கிராமுக்கு 8 குறைந்து ஒரு கிராம் 4,523க்கும், சவரனுக்கு 64 குறைந்து ஒரு சவரன் 36,184க்கும் விற்கப்பட்டது.நேற்று முன்தினம் கிராமுக்கு 22 குறைந்து ஒரு கிராம் 4,501க்கும், சவரனுக்கு 176 குறைந்து ஒரு சவரன் 36,008க்கும் விற்கப்பட்டது.

3வது நாளாக நேற்று காலை தங்கம் விலை கிடு, கிடுவென சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு 61 குறைந்து ஒரு கிராம் 4,440க்கும், சவரனுக்கு 488 குறைந்து ஒரு சவரன் 35,520க்கும் விற்கப்பட்டது.

மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 728க்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை 36 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்ததால் நேற்று நகை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், இன்று நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரிய வரும்.

You May Also Like

About the Author: kalaikkathir