நாட்டிலும் மட்டக்களப்பிலும் அதிகமாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் கோவில் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்த திருவிழா கோவிலில் அமைந்துள்ள தெற்பக்குளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றபோது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் இன்னொரு கொரோனா தொற்று தொத்தணி உருவாக வாய்ப்புள்ளது.
