பேருந்து சேவைகள் இன்றுமுதல் வழமையான சேவையில் ஈடுபடும்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் இன்று முதல் வழமையாக சேவையில் ஈடுபடும் என அந்த சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

4500 பேருந்துகளை இன்று சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை அனுமதிக்குமாறு சகல மாகாணங்களில் உள்ள சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir