கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகள்

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகள் நடை பெற்று வருவதாகவும் எத்தகைய அச்சுறுத்தல்களையும் முறையாகவும் வெற்றிகரமாகவும் எதிர்கொள்ளும் வகையில் இந்த புதிய சட்ட நியதிகள் உருவாக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; உலகில் கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பில் முன்னணியில் திகழ்வது இலங்கையாகும். மரண வீதம் 9.5 விட குறைவாகவே காணப்படுகிறது. அந்த வகையில் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாடுகளில் குறைந்த மரணம் வெற்றிகரமான வைரஸ் ஒழிப்பு என்ற ரீதியில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளைப் போலன்றி நாட்டில் முதலாவது வைரஸ் தொற்று நோயாளி இனங்காணப்பட்ட உடனேயே வைரசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. எனினும் ஏனைய நாடுகள் வைரஸ் தொற்று பரவல் அதிகமாகி மோசமான நிலை உருவாகிய பின்னரே முறையான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

அதேவேளை கொரரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டு அக்குழுவினரின் சிபாரிசு பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir