ஆப்கனில் இருந்து தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட 120 பேருடன் இந்திய ராணுவ விமானம்புறப்பட்டது. ஊழியர்கள் நேற்று மாலை விமான நிலையத்தின் பாதுகாப்பான பகுதிகளுக்குள் அழைத்து வரப்பட்டனர்.
முன்னதாக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது; நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, காபூலில் உள்ள நமது தூதரும் அவரது இந்திய ஊழியர்களும் உடனடியாக இந்தியா செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.