பள்ளம் தோண்டிய போது மண்சரிவில் சிக்கிய தொழிலாளர் மீட்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் பள்ளம் தோண்டிய போது மண்சரிவில் சிக்கிய தொழிலாளர் மீட்கப்பட்டுள்ளார்.

மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது 3 தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கினர். ஆகாஷ், வீரப்பன் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சின்னதுரை மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முதலுதவி சிகிச்சைக்கு பின் தொழிலாளர் சின்னதுரை ஆம்புலன்சில் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir