அம்மா மருந்தகத்தில் முறைகேடு- 2 ஊழியர்கள் கைது

சென்னை போரூர் அம்மா மருந்தகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ. 10 லட்சம் மதிப்பிலான மருந்துகள் இருப்பு இருக்க வேண்டிய நிலையில் ரூ.5 லட்சம் மருந்துகளே உள்ளன.

இதனால் மருந்தாளுனர் சுபாஷினி, உதவியாளர் கிறிஸ்டோபர் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir