நியூஸிலாந்தில் இலங்கையர் ஒருவர் சுட்டுக்கொலை

நியூஸிலாந்தின் – ஒக்லண்ட் நகரில் சிறப்பு அங்காடி ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

குறித்த இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலானது, பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸ்லாந் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கையர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத குறித்த நபர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir