மருத்துவமனைகுள் வெள்ள நீர் உட்புகுந்ததால் 17 பேர் உயிரிழப்பு

மெக்ஸிக்கோவின் மத்திய ஹிடெல்கோ மாநிலத்தில்  மருத்துவமனை ஒன்றிற்குள் வெள்ள நீர் உட்புகுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

மத்துவமனையின் சிகிச்சை அறையில் மருத்துவ பிராணவாயு வழங்கப்பட்டிருந்த கொவிட் நோயாளர்களே இவ்வாறு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு தொடர்ந்தும் பெய்த மழைக்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வைத்தியசாலையின் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகளுக்கு மருத்துவ பிராணவாயு வழங்க முடியாத நிலையில் அவர்கள் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் வெள்ளத்தில் சிக்குண்ட மேலும் 40 நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir