அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மெக்கென்சி தவறுதலாக வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு, ஜனாதிபதி, தன் வருமானத்தில், 25 சதவீதத்தை செலுத்துகிறார்’ என, பத்திரிகையாளர் சந்திப்பில், மெக்கென்சி தெரிவித்தார்.
அப்போது, அவர் காட்டிய காசோலையில், டிரம்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்கள் இருந்தது. அதையும் சேர்த்து அவர் தவறுதலாக ஊடகங்களுக்கு காண்பித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது சம்பளமான 4 இலட்சம் அமெரிக்க டொலர்களில், 25 சதவீதமான 1 இலட்சம் அமெரிக்க டொலர்களை, கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.