பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது என மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது.
“தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் எதிரணியினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப்பிள்ளையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகக் ஹுலை நியமித்த அரசமைப்புப் பேரவை அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.