90 வயதில் விண்வெளி சென்று சாதனை படைத்த வில்லியம் சாட்னர்

உலகப் புகழ்பெற்ற ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சி தொடரில் நடித்த வில்லியம் சாட்னர், விண்வெளிக்கு சென்ற அதிகூடிய வயதுடைய நபர் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

90 வயதான சாட்னரை தாங்கிச் சென்ற என்.எஸ் 18 என்ற விண்வெளி ஓடம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ப்ளூ ஒரிஜின் பிரதேசத்தில் இன்று வெற்றிகரமாகத் தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பான விண்வெளி தொடர்பான பிரபல கற்பனை தொடரான ஸ்டார் ட்ரெக்கில், வில்லியம் சாட்னர் நடித்திருந்தார்.

இந்நிலையில், விண்வெளி வீரராக நடித்த சாட்னர் இன்று தனது நிஜ வாழ்க்கையிலும் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir