துபாயில் கடந்த அக்.1ம் தேதி முதல் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில், தமிழ்நாடு அரசு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 7 நாட்கள் பங்கேற்க உள்ளது. அதன்படி, தமிழக அரசின் சுற்றுலா, கலாசாரம், கைத்தறி, டெக்ஸ்டைல் மற்றும் காதி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயம், தமிழ் மேம்பாடு மற்றும் தகவல் மற்றும் தொழில்துறை போன்ற பல்வேறு துறைகள் துபாயில் நடைபெறும் மாபெரும் கண்காட்சியில் அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி முதல் 24ம் தேதிவரை ஏழு நாட்கள் பங்கேற்க உள்ளது. அதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.