முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டினாலும் அணை பாதுகாப்பாகவே இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து வழக்கு விசாரணை வருகின்ற நவம்பர் 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரும்போது, கேரள அரசின் தவறான பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் வலுவான வாதங்களை திறமையான வழக்கறிஞர்கள் மூலம் வைக்க வேண்டும் என்பதும், அதே சமயத்தில் கேரளாவுடனான நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் தென் தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் தனி கவனம் செலுத்தி, கேரள அரசுடனான நல்லுறவை பேணிப் பாதுகாக்கும் அதே வேளையில், முல்லை பெரியாறு பாசன விவசாயப் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

You May Also Like

About the Author: kalaikkathir