ஆங்கில கால்வாய் ஊடாக பலர் ஆபத்தான பயணம்!

ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்ற படகு விபத்தில் 27 பேர் உயிரிழந்த பின்னரும், பெருமளவானோர் அந்தக் கால்வாயில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஆங்கிலக் கால்வாயின் கலேஸ் பகுதியில், நேற்று இடம்பெற்ற படகு விபத்தில் 17 ஆண்கள், ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட ஏழு பெண்கள், மூன்று சிறுவர்கள் என 27 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டோவர் பகுதிக்கு அருகில், இன்று காலை அதிகளவானோர் உயிர் பாதுகாப்பு அங்கியை அணிந்தவாறு படகில் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir