மனம் மாறினால் 99 பேருக்கும் கதவுகள் திறந்துதான் உள்ளன – சஜித் அணிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

“ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வருவார்களானால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட 99 உறுப்பினர்களின் உறுப்புரிமையை கட்சியின் மத்திய செயற்குழு நீக்கியுள்ளது.

மனம் மாறி வருபவர்களுக்காக ஐ.தே.கவின் கதவுகள் திறக்கப்பட்டே உள்ளன. அவ்வாறு வருவோர்களின் கோரிக்கையை கட்சியின் மத்திய செயற்குழு பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றது” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir